போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்க கோச்சிங் சென்டர்களுக்கு அழைப்பு | Kalvimalar - News

போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்க கோச்சிங் சென்டர்களுக்கு அழைப்புடிசம்பர் 07,2018,11:34 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி:மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்க, தகுதியான தனியார் கோச்சிங் சென்டர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சமூகநலத் துறை இயக்குனர் சாரங்கபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மத்திய சமூக நீதி அதிகாரமளித்தல் அமைச்சகம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாற்றுத்திறன் மாணவர்களை போட்டித் தேர்வுக்கு தயார்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்க விரும்பும் தகுதியான தனியார் கோச்சிங் சென்டர்கள், வரும் 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டம் குறித்த விபரங்களை, துறையின் https://socwelfare.py.gov.in என்ற இணைய தள முகவரியில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us