எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தக்கல் வழி விண்ணப்பப் பதிவு | Kalvimalar - News

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தக்கல் வழி விண்ணப்பப் பதிவுடிசம்பர் 06,2018,18:11 IST

எழுத்தின் அளவு :

ஜனவரியில் நடைபெறவிருக்கும் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தக்கல் திட்டம் மூலம் விண்ணப்பிக்கக் கூடுதல் அவகாசம் தமிழக அரசுத் தேர்வுகள் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பொது தேர்விற்கான விண்ணப்பப் பதிவுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் நோக்கில் டிசம்பர் 11, 12 மற்றும் 13ம் தேதிகளில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல் அல்லது பிறப்புச் சான்றிதழ் நகலை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

எற்கனவே எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை எழுத விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே பெற்ற மதிப்பெண் சான்றிதழ் நகலையும் கண்டிப்பாக இணைக்க வேண்டியது அவசியம். மேலும் ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் வழி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இத்தேர்விற்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்கிற இணையதளத்தில் காணலாம்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us