பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி | Kalvimalar - News

பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சிடிசம்பர் 06,2018,11:37 IST

எழுத்தின் அளவு :

சிவகங்கை: சிவகங்கையில் நேற்றும் பள்ளி மாடியிலிருந்து கீழே குதித்து மற்றொரு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மஜீத் ரோட்டை சேர்ந்த செல்லப்பாண்டியின் 17 வயது மகள் தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் ஒற்றை சடையுடன் பள்ளிக்கு வந்ததால் ஆசிரியை திட்டியுள்ளார். இதனால் அம்மாணவி அவர் நேற்று முன்தினம் பள்ளியின் 3 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். சிவகங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்கும் முன் நேற்றும் ஒரு சம்பவம் நடந்தது. சிவகங்கை - மேலுார் ரோட்டில் வசிக்கும் சிவனேசன் மகள் வேறு ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். புத்தக பைக்குள் மறைத்து அலைபேசியை கொண்டு வந்துள்ளார். பள்ளியின் 2வது மாடியில் உள்ள அலுவலகத்திற்கு சிவனேசனை வரவழைத்து மாணவியின் செயலை கூறியுள்ளனர்.

அவருடன் இருந்த மாணவி திடீரென ஓடி மாடியில் இருந்து கீழே குதித்தார்.இடுப்பு எலும்பு, முதுகு தண்டு வட எலும்புகள் முறிந்த நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிவகங்கை இன்ஸ்பெக்டர் அழகர் விசாரிக்கிறார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us