பழநியில் காட்டாற்று வெள்ளம் : மாணவர்கள் அவதி, வின்ச் பழுது | Kalvimalar - News

பழநியில் காட்டாற்று வெள்ளம் : மாணவர்கள் அவதி, வின்ச் பழுதுடிசம்பர் 06,2018,11:36 IST

எழுத்தின் அளவு :

பழநி: பழநி பகுதியில் நேற்று அதிகாலை முதல் பெய்த கனமழையால், கோம்பைப்பட்டி, சத்திரப்பட்டி நல்லதங்காள் ஓடைகள், வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதியில் நேற்று அதிகாலை 3:00மணி முதல் மழை காலை 9:15மணி வரை மழை கொட்டியது. கணக்கன்பட்டி அருகே கோம்பைபட்டியில் காட்டாற்று வெள்ளத்தில் பெரியதுரையான் பாலத்திற்கு மேலே வெள்ளம் சென்றது. நேற்று திடீரென கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதித்தது. கொடைக்கானல், பழநி மலைப்பகுதியில் மழைபெய்துள்ளதால் அணைகளுக்கு இன்றுமுதல் தண்ணீர் வரத்து அதிரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வின்ச் பழுதுமழை காரணமாக பழநி கோயில் ரோப்கார் காலை 7:00 மணி முதல் 9:00 மணிவரை இயங்கவில்லை.

மின்தடை காரணமாக ஜெனேரேட்டரில் &'வின்ச்&' இயங்கும்போது &'ஷாக்&' ஆனதால் வின்ச்கள் இயக்கம் சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது. உடனடியாக பழுது நீக்கப்பட்டு சோதனை ஓட்டத்திற்குபின் பக்தர்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் இயக்கப்பட்டது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us