மாணவர்களுக்கான இலவச சைக்கிளில் கர்நாடக முத்திரை எப்படி? | Kalvimalar - News

மாணவர்களுக்கான இலவச சைக்கிளில் கர்நாடக முத்திரை எப்படி?டிசம்பர் 06,2018,11:18 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டத்தில், கர்நாடக அரசின், லோகோ வந்தது எப்படி? என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சென்னையைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், &'டிராபிக்&' ராமசாமி தாக்கல் செய்த மனு: பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், அமல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் திட்டத்தை, சட்ட அமைச்சர், சண்முகம் துவக்கி வைத்தார். அப்போது வழங்கப்பட்ட சைக்கிள்களில், கர்நாடக அரசின் முத்திரை இருந்துள்ளது.

இதுகுறித்து, ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. கர்நாடக அரசு முத்திரையுடன் உள்ள சைக்கிள்களை வழங்க கூடாது; வழங்கிய சைக்கிள்களை, திரும்ப பெற வேண்டும். சம்பந்தப்பட்டோருக்கு எதிராக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதிகள், சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தது. &'பத்திரிகை செய்தி அடிப்படையில், வழக்கை எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும்?&' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.நீதிமன்றத்தில் இருந்த, கூடுதல் அட்வகேட் ஜெனரல், நர்மதா சம்பத்திடம், &'சைக்கிள்களில், கர்நாடக அரசு லோகோ எப்படி வந்தது?&' என, நீதிபதிகள் கேட்டனர்.அதற்கு, நர்மதா சம்பத், &'&'தமிழக அரசு முத்திரை தான், சைக்கிள்களில் உள்ளது; சில சைக்கிள்களின் முன்பக்க கூடையில், கர்நாடக அரசு முத்திரை இருந்துள்ளது. அது, தயாரிப்பாளரின் தவறு,&'&' என்றார்.

அதைதொடர்ந்து, விசாரணையை, நான்கு வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us