வனத்துறை காடுகளை மாணவர்கள் சுற்றிப்பார்க்க ஏற்பாடு | Kalvimalar - News

வனத்துறை காடுகளை மாணவர்கள் சுற்றிப்பார்க்க ஏற்பாடுடிசம்பர் 05,2018,11:50 IST

எழுத்தின் அளவு :

அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி:&'புதுச்சேரியில் வனத்துறை காட்டை, பள்ளி மாணவர்கள் சுற்றிப் பார்க்கும் வகையில், நடைபாதை உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும்&' என, கவர்னர் கிரண்பேடி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கவர்னர் கிரண்பேடி, துறை வாரியாக ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆய்வு செய்து வருகிறார். நேற்று, கடலுார் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு கூண்டுகளில் வைத்து பராமரிக்கப்படும் பாம்பு, மான், மயில், காட்டு நாய், கீரிப்பிள்ளை மற்றும் பறவைகளை பார்வையிட்டார்.

வனத்துறை அலுவலகத்தையொட்டி அமைந்துள்ள வனக்காட்டிற்குள் சென்று, அங்குள்ள பழமையான மரங்கள், செடிகளை பார்வையிட்டு, விபரம் கேட்டறிந்தார். தொடர்ந்து, வனத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.வனத்துறை அலுவலகம் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பது குறித்து வருத்தம் தெரிவித்த கவர்னர், இங்குள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், பழுதடைந்த வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். காட்டில் பெரிய பள்ளம் தோண்டி, குப்பைகளை மக்கவைத்து உரமாக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

வனத்துறை அலுவலகம் மற்றும் வனக்காட்டை சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ மாணவியர் சுற்றிப் பார்க்கும் வகையில், நடைபாதைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும்.அதுகுறித்த திட்டம் தயாரிக்க வேண்டும். வனத்துறை காட்டில் உள்ள மரங்கள், பறவைகள், மிருகங்கள் குறித்த விபரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்க வேண்டும்.

வனத்துறையால் மீட்கப்படும் பறவைகள், விலங்குகள் குறித்த விபரங்களை கம்ப்யூட்டரில் பதிய வேண்டும். வனத்துறையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பதிவு செய்ய வேண்டும். நகரில் உள்ள வனங்களை மேம்படுத்தி, சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்கும் வகையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us