தொழில்நுட்ப அறிவு அவசியம்: தினமலர் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி வலியுறுத்தல் | Kalvimalar - News

தொழில்நுட்ப அறிவு அவசியம்: தினமலர் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி வலியுறுத்தல்டிசம்பர் 05,2018,11:42 IST

எழுத்தின் அளவு :

மதுரை: &'&'எதிர்கால தொழில்நுட்பங்கள், தொடர்பான அறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்,&'&' என, தினமலர் இணை இயக்குனர் பொறியாளர், ஆர்.லட்சுமிபதி வலியுறுத்தினார்.

மதுரை, டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளியில் நடந்த, &'மிலாஞ்ச் 2018&' என்ற, மாணவர்களின் அறிவியல் கண்காட்சி விழாவில், அவர் பேசியதாவது:மாணவர்கள் காட்சிப்படுத்திய படைப்புகளிலிருந்து, அவர்கள் சிந்தனை வெளிப்பட்டது. இதன் வழியாக, தொழில்நுட்ப அறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள ஆர்வம் வேண்டும்.மனதை அமைதியாக, அறிவை கூர்மையானதாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல், மனம் மற்றும் உணர்வை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால், ஆன்மிக சிந்தனையும் ஆரோக்கியமானதாக அமையும். பண்பாட்டை வெளிப்படுத்தும், இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை, நடைமுறையிலும் பின்பற்ற வேண்டும்.

மனப்பாடம் செய்யாமல், பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். எதிர்கால தொழில்நுட்பம் குறித்து, மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ஒன்பது, 10ம் வகுப்பு சார்பில், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலம், சமூக அறிவியல் மற்றும் தமிழ் பாடப் பிரிவு மாணவர்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஆர்.லட்சுமிபதி பரிசு வழங்கினார். பள்ளி இயக்குனர், சீனிவாசன், முதல்வர் அருணாகுமாரி, துணை முதல்வர் குமார், ஆசிரியர் மோகனன் நம்பூதிரி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us