ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் திருத்தி படிக்க அறிவுரை | Kalvimalar - News

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் திருத்தி படிக்க அறிவுரைஅக்டோபர் 20,2018,11:07 IST

எழுத்தின் அளவு :

திண்டுக்கல், ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் கண்டு பிடிக்கப்பட்டு, அவற்றை திருத்தி படிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் பருவ சமூகஅறிவியல் புத்தகத்தில் 5 பிழைகள் இருப்பதை மாநில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கண்டறிந்து திருத்தி உள்ளது.பிழைகளும், திருத்தங்களும்* குடிமையியல் பகுதி &'மனித உரிமைகள்&' பாடத்தில் (பக்கம் 124), மலாலா பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. அதில், இரண்டாவது பத்தியில் விடுபட்ட, &'நான் பொது இடத்தில் பேசினேன். அதனால் அடிப்படைவாதிகளின் இலக்கானேன்&' என்ற வரிகளை தக்க இடத்தில் சேர்த்து படிக்க வேண்டும்.


 அதே பாடத்தில் (பக்கம் 125), &'போக்ஸோ சட்டம்&' துணை தலைப்பில், POCSO என்ற ஆங்கில வார்த்தை POSCO என்றும், தமிழில் &'போக்ஸோ&' என்பதற்கு பதில் &'பாஸ்கோ&' என்றும் தவறாக குறிப்பிடப்பட்டு இருப்பதை சரியாக திருத்தி படிக்க வேண்டும்.


 அதே பாடத்தில் (பக்கம் 128) இடஒதுக்கீடு என்ற பத்தியில் 8 வது வரியில் &'பெண்களுக்கு 33 சதவீதம்&' என்று இருப்பதை &'பெண்களுக்கு 30 சதவீதம்&' என்றும், அதே பக்கத்தில் இடஒதுக்கீடு என்ற துணை தலைப்பில் கொடுக்கப்பட்டு இருக்கும் அட்டவணையில், &'பழங்குடியினர் 3 சதவீதம்&' என்று அச்சாகி இருப்பதை &'பழங்குடியினர் 1 சதவீதம்&' என்றும் சரியாக திருத்தி படிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us