அரசு உயர்நிலை பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு விளையாட்டு | Kalvimalar - News

அரசு உயர்நிலை பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு விளையாட்டுஅக்டோபர் 11,2018,15:57 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி:அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாக்காளர் கல்விக் குழு தொடக்கவிழா மற்றும் விழிப்புணர்வு விளையாட்டுகள் மூலம் வாக்காளர்களின் அடிப்படை பண்புகள், உரிமைகள் அறிந்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி வாக்காளர் கல்விக்குழுவின் நோடல் அலுவலர் துரை ராமலிங்கம் வரவேற்றார். தலைமையாசிரியர் அச்சுதன், வாக்காளர் கல்விக் குழுவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். தேர்தல் துறையின், தேர்தல் பங்களிப்பு மற்றும் வாக்காளர் கல்வி பிரிவின் ஆலோசகர் நெடுஞ்செழியன், மேல்நிலை எழுத்தர் அருண் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

வாக்காளருக்கான தகுதி, வாக்களிப்பதன் முக்கியத்துவம், நேர்மையாக வாக்களித்தல் மற்றும் சிறந்த வேட்பாளரை தேர்வு செய்தல் குறித்து விழிப்புணர்வு விளையாட்டுகள் நடத்தப்பட்டது.குழுவின் பெயர் பலகையை மாணவர்கள் திறந்து வைத்தனர். ஆசிரியை கோமதி நன்றி கூறினார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us