புதுச்சேரி பல்கலைக்கு நாக் கமிட்டி வருகை! அனைத்து துறைகளும் முழு வீச்சில் ரெடி | Kalvimalar - News

புதுச்சேரி பல்கலைக்கு நாக் கமிட்டி வருகை! அனைத்து துறைகளும் முழு வீச்சில் ரெடிசெப்டம்பர் 14,2018,10:54 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு, நாக் கமிட்டி வருகை தந்து, மூன்று நாட்கள் ஆய்வு நடத்த உள்ளதால் அனைத்து துறைகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த 1985ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பல்கலைகழகத்தில் தற்போது 15 புலம்களும், 51 துறை, மையங்களும் உள்ளன. 158 முதுநிலை ஆய்வு படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், 97 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன.

பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை பாராட்டி, நாக் கமிட்டி கடந்த 2011 ம் ஆண்டு, &'&' கிரேடு அந்தஸ்தினை ஐந்தாண்டுக்கு வழங்கியது. இதன் காலக்கெடு கடந்த 2015ம் ஆண்டோடு முடிந்தது. இதனையடுத்து, பல்கலைக்கழகம் சுய மதிப்பீடு செய்து, மீண்டும் நாக் கமிட்டியின் அந்தஸ்திற்காக விண்ணப்பித்தது. நிரந்தர துணை வேந்தர் இல்லாமல் இருந்ததால், நாக் கமிட்டி குழுவினை அனுப்பி வைக்காமல் மவுனம் காத்து வந்தது.

சுற்றறிக்கை

புதிய துணை வேந்தராக குர்மீத் சிங் நியமிக்கப்பட்ட பிறகு, மீண்டும் அப்டேட்டுடன் கூடிய சுய மதிப்பீடு செய்து விண்ணப்பிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நாக் கமிட்டி, புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு, வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை பார்வையிட்டு ஆய்வு நடத்தும் என அறிவித்துள்ளது.

இதனையடுத்து பல்கலைக்கழக துறைகள் அனைத்தும் முழு வீச்சில் ரெடியாகி வருகின்றன. இது தொடர்பாக பல்கலைக்கழகம் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2012ம் ஆண்டு முதல், துறைகளின் வளர்ச்சி பணிகள் குறித்து, ஆவணங்களை தயார் நிலையில் வைக்க பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அதனை படக்காட்சிகளுடன் நாக் கமிட்டிக்கு விளக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மாக் பீர் கமிட்டி

புதுச்சேரி பல்கலைக்கழகம் சமர்ப்பித்த சுய மதிப்பீடு தொடர்பாக சோதனை ஆய்வு நடத்த முன்னதாக பேராசிரியர்கள் அடங்கிய மாக் பீர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு வரும் 14ம் தேதி காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரை, பல்கலைக்கழக துறைகளில் ஒத்திகை ஆய்வினை நடத்த உள்ளது. அத்துடன் 15ம் தேதி பல்கலைக்கழகம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாக் கமிட்டி பல்கலைக்கழகபாடத்திட்டம், மாணவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி விகிதம், வேலைவாய்ப்பு, முன்னாள் மாணவர் சங்கங்களின் பங்களிப்பு, ஆய்வு, கண்டுபிடிப்புகள், துறை வளர்ச்சி, புரிந்துணர்வு ஒப்பந்தம், காப்புரிமை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யும். பின், செயற்குழுவில் இந்த அறிக்கை விவாதிக்கப்பட்டு, கிரேடு அந்தஸ்து வழங்கப்படும்.

நன்மைகள் ஏராளம்:

புதுச்சேரி பல்கலைக்கழகம் தற்போது &'&' கிரேடு பெற்றுள்ளது. இந்த உயர்ந்த அந்தஸ்தை மீண்டும் பெற்றால்நாட்டில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் எந்த திட்டத்தையும் இனி, புதுச்சேரி பல்கலைக்கழகம் பெற்று நடைமுறைப்படுத்த முடியும். பல்கலைக்கழக மானிய குழுவிடமிருந்து கூடுதல் நிதி உதவியை கோர முடியும். மேலும், வெளிநாடுகளில் பயில செல்லும் மாணவர்களுக்கும், &'&' கிரேடு அந்தஸ்து பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

துணைவேந்தர் உருக்கம்

நாக் கமிட்டி ஆய்வுக்கு வரும்போது முந்தைய துணைவேந்தர்கள் பொதுவாக துறை தலைவர்களை மட்டுமே சந்திப்பர். ஆனால், புதிய துணைவேந்தர் குர்மீத் சிங், துறை தலைவர்கள் மட்டுமின்றி, பேராசிரியர்கள், அதிகாரிகள், கடைநிலை ஊழியர்கள், மாணவர்களை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார். அப்போது, நான் மூன்று ஆண்டுகள் இங்கு இருப்பேன். அதன் பிறகு போய் விடுவேன். இது உங்கள் பல்கலைக்கழகம். நீங்கள் தான் இங்கு நிரந்தரமாக இருப்பீர்கள். வல்லுநர் குழுவிடன் பல்கலைக்கழகம் பற்றி எதிர்மறை கருத்தினை கூறினால் நமக்கு தான் இழப்பு. மதிப்பெண் தான் குறையும் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆய்வில் புதுமை

வழக்கமாக நாக் கமிட்டி ஆய்வுக்கு வரும் வல்லுநர்கள் பற்றி விபரங்களை முன் கூட்டியே அனுப்பி விடும். ஆனால் இந்த முறை ரகசியமாக வைத்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கு வந்த பிறகு அனைத்து துறைகளுக்கும் செல்லாமல், சில துறைகளுக்கு மட்டும் சர்பிரைஸ் விசிட் அடிக்க உள்ளது.

-நமது சிறப்பு நிருபர்-


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us