துணை மருத்துவம் : மாணவர்கள் ஆர்வம் | Kalvimalar - News

துணை மருத்துவம் : மாணவர்கள் ஆர்வம்செப்டம்பர் 11,2018,10:09 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, துணை மருத்துவ படிப்புகளில் சேர, மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். ஒரே நாளில், 5,191 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., - பி.பி.டி., உள்ளிட்ட, 15 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டில், 8,000; நிர்வாக ஒதுக்கீட்டில், 4,000த்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.மாணவர் சேர்க்கைக்கான, விண்ணப்ப வினியோகம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளில் நேற்று துவங்கியது.

முதல் நாளில், 5,191 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். மேலும், www.tnhealth.org; www.tnmedicalselection.org என்ற இணையதளங்களிலும், விண்ணப்பங்களை பதிவிறக்கம செய்து கொள்ளலாம்விண்ணப்பங்களை, வரும், 19ம் தேதி வரை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 20ம் தேதிக்குள், கீழ்ப்பாக்கம், மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us