இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் 36 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு | Kalvimalar - News

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் 36 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடுஆகஸ்ட் 10,2018,10:29 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், மூன்று சுற்றுக்கள் வரையில், 36 ஆயிரம் பேர் மட்டுமே, இன்ஜி., படிப்பில் சேர்ந்துள்ளனர்; 19 ஆயிரம் பேர் சேரவில்லை.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 509 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு முதல், &'ஆன்லைன் கவுன்சிலிங்&' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

 

ஐந்து சுற்றுக்களாக நடக்கும் கவுன்சிலிங்கில், மூன்று சுற்றுக்கள் நேற்றுடன் முடிந்தன. மூன்றாம் சுற்றில் மட்டும், 17 ஆயிரத்து, 152 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.மூன்றாம் சுற்றில், 25 ஆயிரத்து, 710 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 19 ஆயிரத்து, 338 பேர் மட்டும், கவுன்சிலிங் கட்டணம் செலுத்தினர்.

 

அதிலும், 18 ஆயிரத்து, 534 பேர் தான், விருப்ப பதிவில் பங்கேற்றனர். இவர்களில், 17 ஆயிரத்து, 152 பேர் மட்டுமே, இறுதியாக இட ஒதுக்கீடு உத்தரவு பெற்றுள்ளனர். 1,382 பேர், இடங்களை எடுக்கவில்லை.இதுவரை நடந்த மூன்று சுற்றுக்களிலும், 54 ஆயிரத்து, 957 பேர், கவுன்சிலிங்குக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 36 ஆயிரத்து, 126 பேர் மட்டுமே, இடங்களை தேர்வு செய்துள்ளனர். 

 

அதாவது, பொது பாடப்பிரிவில், 1.70 லட்சம் இடங்களுக்கு விண்ணப்பித்த, 1.02 லட்சம் பேரில், 54 சதவீதம் பேர், இதுவரை நடந்த மூன்று சுற்றுகளிலும் பங்கேற்றுஉள்ளனர்.மீதமுள்ள இரண்டு சுற்றுகளுக்கு, 47 ஆயிரம் பேர் உள்ளனர். ஆனால், 1.34 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. எனவே, ஐந்து சுற்றுக்களும் முடியும் நிலையில், ஒரு லட்சம் இடங்கள் வரை காலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், பொது பாடப்பிரிவு கவுன்சிலிங்கில், 86 ஆயிரம் இடங்கள் நிரம்பின; 89 ஆயிரம் இடங்கள் காலியானது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us