தொடக்க கல்வி இயக்குனர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு | Kalvimalar - News

தொடக்க கல்வி இயக்குனர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவுஜூலை 12,2018,11:59 IST

எழுத்தின் அளவு :

சென்னை: நர்சரி பள்ளிக்கு அனுமதி வழங்கியது எப்படி என்பதை, நேரில் ஆஜராகி விளக்கும்படி, தொடக்கக் கல்வி இயக்குனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, சின்னக் கொடுங்கையூரை சேர்ந்த, சசிகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு:புழல் அருகே, கன்னடப்பாளையத்தில், ஸ்ரீ சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி இயங்கி வருகிறது. &'ஆஸ்பெட்டாஸ்&' கூரையில், இந்தப் பள்ளி இயங்குகிறது; முறையான கட்டடம் இல்லை. எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தை, மகாலிங்கம் என்பவர் குத்தகைக்கு பெற்று, பள்ளியை துவங்கினார்.

ஒப்பந்தம் முடிந்த பிறகும், தொடர்ந்து பள்ளியை நடத்துகிறார்.முறையான கட்டட வசதியின்றி செயல்படும் இந்த பள்ளி குறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர், திருவள்ளூர் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிக்கு புகார் அனுப்பியும், நடவடிக்கை இல்லை.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி வைத்தியநாதன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. பள்ளியின் நிலை குறித்து, புகைப்படங்களும், தாக்கல் செய்யப்பட்டிருந்தன. புகைப்படங்களை பார்த்த பின், அரசு வழக்கறிஞரிடம், &'கட்டட வசதி இல்லாத பள்ளிக்கு, எப்படி அனுமதி வழங்கப்பட்டது.

கழிப்பறைகள், திறந்தபடி உள்ளன. அதை மறைக்க, சேலையை தொங்க விட்டுள்ளனர். &'கும்பகோணம் பள்ளி தீ விபத்து போல், இன்னொரு சம்பவம் நடந்தால் தான், நடவடிக்கை எடுப்பீர்களா...&' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.இதையடுத்து, &'அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிக்கு, எப்படி அனுமதி நீட்டிக்கப்படுகிறது என்பதை, தொடக்கக் கல்வி இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்க வேண்டும்&' என, நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

விசாரணையை, ௧௮ம் தேதிக்கு, தள்ளி வைத்தார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us