மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஆதார் சமர்ப்பிக்க உத்தரவு | Kalvimalar - News

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஆதார் சமர்ப்பிக்க உத்தரவுஜூன் 23,2018,10:43 IST

எழுத்தின் அளவு :

சென்னை, மருத்துவ படிப்புக்கான சேர்க்கையின் போது, ஆதார் அட்டையை, மாணவர்கள் தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மருத்துவ படிப்பில், ௨௦௧௭ - ௧௮ம் ஆண்டில், இரட்டை இருப்பிட சான்றிதழ் அளித்து, மாணவர்கள் சேர்ந்திருப்பதால், சேர்க்கையை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுக்களில், &'கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான சான்றிதழ் பெற்று, இங்குள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.

&'அதனால், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, இங்குள்ள அரசு கல்லுாரிகளில் இடம் கிடைக்காமல் போய் விடுகிறது&' என, கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். வெளிமாநிலங்களிலிருந்து விண்ணப்பித்த, ௩௦௦ மாணவர்களின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று, மருத்துவ படிப்பில் பலர் சேர்ந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:மற்ற மாநிலங்களில், மாணவர்களின் ஆதார் எண்ணை, விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என, வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை, மற்ற வழக்கறிஞர்களும் உறுதி செய்தனர். மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன் பெற ஏதுவாக, கவுன்சிலிங்கின் போது, ஆதார் அட்டை மற்றும் அதன் நகலை, கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும்.

அதனால், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தடுக்கப்படுவர். எனவே, மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள், ஆதார் அட்டை மற்றும் அதன் நகலை, சேர்க்கையின் போது தாக்கல் செய்யும்படி, அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். இதை, இரண்டு நாட்களுக்குள், இணையதளத்திலும், பத்திரிகைகளிலும் வெளியிட வேண்டும். மொபைல் போன்களில், எஸ்.எம்.எஸ்., செய்தியாகவும், மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us