மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மை செயலருக்கு உத்தரவு | Kalvimalar - News

மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மை செயலருக்கு உத்தரவுஜூன் 14,2018,14:19 IST

எழுத்தின் அளவு :

மதுரை:ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லுாரி அமைப்பது தொடர்பான வழக்கில் சுகாதார முதன்மை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் திருமுருகன் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 14.50 லட்சம் பேர் வசிக்கின்றனர். 23 வார்டுகளுடன் தலைமை அரசு மருத்துவமனை செயல்படுகிறது. ஆண்டு தோறும் சாலை விபத்துக்களால் நுாற்றுக் கணக்கானோர் பலியாகி வருகின்றனர். தினமும் 2,500 பேருக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். அவசர சிகிச்சை நோயாளிகளை வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பும் நிலை உள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் அரசு தலைமை மருத்துவமனையில் 642 படுக்கை வசதி இருக்க வேண்டும். இங்கு 300 மட்டுமே உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி அரசு மருத்துவ கல்லுாரி 110 கி.மீ., துாரம் இருக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் அனைத்து பகுதிகளில் இருந்தும் 120 கி.மீ., துாரத்தில் உள்ளது.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைக்கக்கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். பரிசீலனை செய்யவில்லை. இம் மனுவை அடிப்படையாக கொண்டு இங்கு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இம்மனு நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us