சட்ட படிப்பு கலந்தாய்வுக்கு தடை விதிக்க கோர்ட் மறுப்பு | Kalvimalar - News

சட்ட படிப்பு கலந்தாய்வுக்கு தடை விதிக்க கோர்ட் மறுப்புஜூன் 14,2018,14:18 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி:தேசிய சட்ட நுழைவு தேர்வில், தொழில்நுட்ப கோளாறால் மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு, முறைப்படுத்தப்பட்ட மதிப்பெண் வழங்கி, 15ம் தேதிக்குள், திருத்தப்பட்ட தர வரிசை பட்டியலை வெளியிட, கொச்சியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்படும், 19 சட்ட கல்லுாரிகளில் சேர, &'க்ளாட்&' எனப்படும், தேசிய அளவிலான சட்ட நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்கான தேர்வு, மே, 13ல், &'ஆன்லைன்&' முறையில் நடத்தப்பட்டது.அப்போது, ஒரு சில தேர்வு மையங்களில், கம்ப்யூட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மாணவர்கள் விடையளிக்க, தாமதம் ஏற்பட்டது. 

இதனால், தரவரிசையில் தங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, மாணவர்கள் சிலர், வழக்கு தொடர்ந்துள்ளனர். முதல் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், யு.யு.லலித் மற்றும் தீபக் குப்தா தலைமையிலான அமர்வு, தொழில்நுட்ப கோளாறால் மதிப்பெண்கள் குறைந்த மாணவர்களுக்கு, உரிய நியாயம் கிடைக்க, ஆவன செய்யும் படி, கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் தேசிய சட்ட பல்கலைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், முதல் கட்ட மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் மற்றும் அதன் அடிப்படையிலான தரவரிசையை, 15ம் தேதிக்குள் வெளியிட உத்தரவிட்டு உள்ளனர். 

இதன் வாயிலாக, 16ல் துவங்கும் இரண்டாம் கட்ட கவுன்சிங்கில், மாணவர்கள் தங்கள் தரவரிசைக்கு ஏற்ப, கல்லுாரிகளில் சேர முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us