நீட் தேர்வில் கருணை மதிப்பெண் சி.பி.எஸ்.இ., க்கு நோட்டீஸ் | Kalvimalar - News

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் சி.பி.எஸ்.இ., க்கு நோட்டீஸ்ஜூன் 14,2018,13:08 IST

எழுத்தின் அளவு :

மதுரை:நீட் தேர்வில் தமிழ் வழி மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் மத்திய, மாநில அரசுகள், சி.பி.எஸ்.இ.,க்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மார்க்சிஸ்ட் ராஜ்யசபா எம்.பி., ரங்கராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: &'நீட்&' தேர்வில் தமிழ் வழியில் எழுதிய மாணவர்களுக்கு வழங்கிய வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக இருந்தன. இதற்கு 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண் வழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள், சி.பி.எஸ்.., க்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்வு முடிவுபடி மருத்துவ சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும். &'நீட்&' தேர்வு முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.நீதிபதிகள் செல்வம், பஷீர்அகமது முன் விசாரணைக்கு வந்தது.மத்திய, மாநில அரசுகள், சி.பி.எஸ்..,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூன் 27 க்கு ஒத்திவைத்தனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us