இன்டர்நெட்டை பயன்படுத்தி இலவசமாக வெளிநாட்டு மொழிகளைக் கற்க முடியுமா? | Kalvimalar - News

இன்டர்நெட்டை பயன்படுத்தி இலவசமாக வெளிநாட்டு மொழிகளைக் கற்க முடியுமா?அக்டோபர் 18,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் இன்டர்நெட்டை பயன்படுத்தி வெளிநாட்டு மொழிகளைக் கற்பது சிரமமானதாக இருக்கவில்லை. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளுக்கான பாடங்களை தினமும் ஒன்றிரண்டு டவுண்லோட் செய்து படிக்கும் சைட்கள் இருக்கின்றன.

சோஷியல் நெட்வொர்க்கிங் வெப்சைட்களை பயன்படுத்தி நமது பேசும் திறன்களை கூர்மைப்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. www.livemocha.com

தளத்திலிருந்து பிரெஞ்சு, ஜெர்மனி, மண்டரின், ஸ்பானிஷ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நமது திறனை ஓரளவு நாம் வளர்த்துக் கொள்ள முடியும். இதற்குக் கட்டணம் இல்லை. தளத்தை பயன்படுத்துவோர் ஒருவருக்கொருவர் உதவுவது தான் சேவைக் கட்டணமாகக் கருதுப்படுகிறது. பாட்காஸ்டிங் முறையிலும் நீங்கள் வெளிநாட்டு மொழிகளை அறியலாம்.

Search this Site