பிளஸ் 2 தேர்வு முடிவு; 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி | Kalvimalar - News

பிளஸ் 2 தேர்வு முடிவு; 91.1 சதவீதம் பேர் தேர்ச்சிமே 16,2018,10:37 IST

எழுத்தின் அளவு :

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை, 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்கள் மற்றும் 70 ஆயிரத்து 686 தனித்தேர்வர்கள், 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்களில் எழுதினர். சிறையில் இருந்தே 103 ஆண் கைதிகளும் தேர்வு எழுதினர்.

இதில் 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

பாடவாரியாக தேர்வு எழுதிய மாணவர்கள் விபரம்:

அறிவியல் பாடப்பிரிவு: 5 லட்சத்து 47 ஆயிரம் மாணவர்கள்

வணிகவியல்: 2 லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள்

கலைப்பிரிவு: 14 ஆயிரம் மாணவர்கள்

தொழிற்கல்வி பிரிவு: 60 ஆயிரம் மாணவர்கள்

 

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்:

இயற்பியல் - 96.4 சதவீதம்

வேதியியல் - 95 சதவீதம்

கணிதம் - 96.1 சதவீதம்

உயிரியல் - 96.3 சதவீதம்

தாவரவியல் - 93.9 சதவீதம்

விலங்கியல் - 91.9 சதவீதம்

கணினி அறிவியல் - 91.1 சதவீதம்

வணிகவியல் - 90.3 சதவீதம்

கணக்கு பதிவியல் - 91 சதவீதம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள: www.tnresults.nic.in www.dge1.tn.nic.in  மற்றும் www.dge2.tn.nic.in


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us