பெட்ரோலிய பல்கலையில் எம்பிஏ படிப்பு | Kalvimalar - News

பெட்ரோலிய பல்கலையில் எம்பிஏ படிப்பு

எழுத்தின் அளவு :

காந்திநகர்: பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகம், 2013ம் கல்வியாண்டிற்கான எம்பிஏ படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இந்தப் படிப்பானது, 2 வருட முழுநேர ரெசிடென்ஷியல் படிப்பாகும். ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு என்ற பிரிவில் வழங்கப்படும் எம்பிஏ படிப்பிற்கு 60 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

மார்க்கெடிங், பைனான்ஸ் ஆபரேஷன்ஸ் மற்றும் எச்.ஆர்.எம் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படும் எம்பிஏ படிப்புகளுக்கும் 60 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

கேட் - 2012 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். மேலும், GD, PI, பணி அனுபவம் மற்றும் கல்விச் சாதனைகள் ஆகிய அம்சங்களும் கணக்கில் எடுக்கப்படும்.

இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் கடைசித்தேதி மார்ச் 8. அனைத்து விபரங்களையும் அறிய www.spm.pdpu.ac.in என்ற வலைத்தளம் செல்க.

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us