தொலைதூரக் கல்வி முறையில் எம்.பி.ஏ - பொறியியல் படிப்பு | Kalvimalar - News

தொலைதூரக் கல்வி முறையில் எம்.பி.ஏ - பொறியியல் படிப்பு

எழுத்தின் அளவு :

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் தொலைதூரக் கல்வி முறையில் இஞ்சினியரிங் மற்றும் எம்.பி.ஏ. படிப்பினை வழங்க அனுமதி அளித்துள்ளது.

புதிய புதிய பாடத்திட்டங்கள், கற்கும் முறைகள் என கல்வி துறையில் மாற்றம் நிகழ்ந்து வரும் காலக்க்கட்டத்தில் AICTE இந்த சிறப்பு வாய்ந்த முடிவை எடுத்துள்ளது. முன்னாள் கான்பூர் ஐ.ஐ.டி. இயக்குநர் சஞ்சய் தாண்டே மற்றும் கான்பூர் ஐ.ஐ.டி. சேர்மேன் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான குழு, தொலை தூரக் கல்வி முறையில் பொறியியல் மற்றும் இதர படிப்புகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி உள்ளது.

இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் கல்லூரிக்குச் சென்று படித்திருக்க வேண்டும். அதனோடு  கூட ஐந்து வருட பணி அனுபவமும் இருந்தால் மட்டுமே தொலை தூரக் கல்வி முறையில் பொறியியல் படிப்புகளை படிக்க இயலும்.

தொலை தூரக் கல்வி முறையில் கல்வியின் தரம் குறந்துவிடக் கூடாது என்பதற்காக AICTE சில வரைமுறைகளை வகுத்துள்ளது. இதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றால் தான் படிப்பில் சேர முடியும். அது போன்று படித்து முடித்தவுடன் நடத்தப்படும் தகுதித்தேர்விலும் வெற்றி பெற்றால்தான் பட்டம் பெற முடியும்.

விருப்பமுள்ள கல்லூரிகள் மார்ச் 1 முதல் AICTE -யிடம் விண்ணப்பிக்கலாம். இத்தகைய கல்வி முறை மேலும் படிக்க முடியவில்லையே என்ற  ஏக்கத்துடன் வேலை பார்த்து வருபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். தற்பொழுதுதான் அறிமுகப்படுத்தப்படுவதால் தொலை தூர பொறியியல் படிப்பில் சேர்வதற்கு சற்று காத்திருக்க வேண்டும்.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us