டெல்லி: மனித உரிமைகளுக்கான இந்திய கல்வி நிறுவனம், மனித உரிமைகள் தொடர்பான முதுநிலைப் படிப்பை வழங்குகிறது. தொலைதூரக் கல்வி முறையில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
இப்படிப்பின் காலஅளவு 2 ஆண்டுகள். சேர விரும்புவோர், குறைந்தபட்சம் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பூர்த்திசெய்த விண்ணப்ப படிவத்துடன், முதல் வருட கட்டணமும் வந்துசேர வேண்டிய கடைசித்தேதி மார்ச் 14.
இதுகுறித்த அனைத்து விரிவான விபரங்களுக்கும் www.humanrights.net.in என்ற வலைத்தளம் செல்க.