மேட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? | Kalvimalar - News

மேட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

எழுத்தின் அளவு :

மேனேஜ்மென்ட் படிக்க, அனைத்து இந்திய மேலாண்மை கழகம் (ஏ.ஐ.எம்.ஏ.,) இந்த ஆண்டுக்கான மேட் எனப்படும், மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் தேர்வை நடத்துகிறது. ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்தவர்கள், தற்போது இறுதியாண்டு படித்துக்கொண்டு இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன், ஆப்லைன் முறைகளில் தேர்வு நடைபெறும். ஆப்லைன் தேர்வு, பிப்., 3 அன்று காலை (10 to 12.30 மணி) வரையும், ஆன்லைன் தேர்வு பிப்., 9 அன்றும் நடைபெறும்.  ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து தேர்வு மையங்கள், தேர்வு நாள், நேரம் போன்றவை மாற்றம் பெறும்.

ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் குறைவாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் ஆப்லைன் தேர்வு எழுத அனுமதிக்கப் படுவர். மாணவர்கள், ஒரு தேர்வு முறைக்கு, ஒருமுறை விண்ணப்பித்தலே போதும்.

விருப்பமுள்ளவர்கள், படிவத்தை பாங்க் ஆப் பாரோடா, ஆக்ஸிஸ் பேங்க், (ஏ.ஐ.எம்.ஏ.,) கிளைகளில் நேரில் 1,200 ரூபாய் செலுத்தி பெறலாம். தபாலில் பெற, 1,200 ரூபாய்க்கு, ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசியேஷன் என்ற பெயரில் டில்லியில் மாற்றத்தக்கதாக டி.டி., எடுத்து, கல்வி நிறுவன முகவரிக்கு அனுப்பி, விண்ணப்பப்படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.

விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் 7 நாட்களுக்கு முன், தேர்வு நுழைவுச் சீட்டை இணையதளத்தில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவம் வழங்குதல், ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்தல் போன்றவற்றிற்கு கடைசி நாள் ஜன.,14. விண்ணப்பப் படிவத்தை அனுப்ப கடைசி நாள் ஜன., 17. விவரங்களுக்கு apps.aima.in/matfeb13 என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us