திருச்சி பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (பிம்) கல்வி நிறுவனம், 2013 2015 கல்வி ஆண்டுக்கான, எம்.பி.ஏ., (மார்க்கெட்டிங், நிதி, மனிதவள மேலாண்மை) படிப்புக்கு அட்மிஷன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கட்டணம் 1,450 ரூபாய்.
சமீபத்தில் நடந்த கேட் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கடைசி தேதி: 2013 ஜன.,31. (தேதியில் மாற்றம் இருந்தால் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது). மேலும் விபரங்களுக்கு: www.bim.edu