காலமான விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! | Kalvimalar - News

காலமான விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!மார்ச் 14,2018,17:31 IST

எழுத்தின் அளவு :

உலகின் தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானி எனப் போற்றப்படும் புகழ்பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை இங்கிலாந்தில் காலமானார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியலாளரும், வானியல் ஆராய்ச்சியாளருமான ஸ்டிபன் ஹாக்கிங் 1942ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். 1963ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டதால் இவரது கை, கால்கள் செயலிழந்ததோடு, இவரது பேசும் திறனும் பாதிக்கப்பட்டது. அதன் பிறகும் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்காமல், அயராத உழைப்பினாலும், தனக்கு அறிவியலின் மீதிருந்த அதீத காதலினாலும் உலகமே போற்றும் தன்னிகரற்ற இயற்பியல் அறிஞராகத் தன்னை முன்னிலைப் படுத்தினார்.


எப்போதும் ஒரு வீல் சாரில் ஒரு பக்கம் தலை சாய்த்த படி தன் வாழ்க்கையைக் கழித்த இவர் பேச்சு திறனை இழந்ததால், தனது எண்ண ஓட்டத்தைக் கணினியின் மூலம் வார்த்தைகளாக்கி மற்றவர்களுடன் பேசி வந்தார். குவாண்டம் கோட்பாடு தந்த இவர், ‘டைம் மிஷின்’, வேற்றுக் கிரக வாசிகளுடனான தொடர்பு, ‘பிக் பாங் தியரி’ போன்றவற்றை பற்றியெல்லம் ஆராய்ச்சி செய்து வந்தார். ‘எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ என்று நேரத்தைப் பற்றி இவர் எழுதிய புத்தகம் உலகின் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதைத் தவிர ‘தி யுனிவர்ஸ் இன் எ நட் ஷெல்’, ‘மை ஃப்ரீஃப் ஹிஸ்டரி’ போன்ற நூல்களையும் இவர் எழுதியுள்ளார். மேலும் இவர் உலக பிரசதிப்பெற்ற ‘ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைகழகத்தில்’ பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய அறிவுப் புரட்சியில் ஒன்று இவர் கூறிய பேரண்டம் விரிந்து கொண்டிருக்கிறது அல்லது சுருங்கிக் கொண்டே வருகிறது என்ற கோட்பாடு. இந்த உலகம் அழிவின் பாதையில் உள்ளது, மனிதர்களாகிய நாம் வெகு விரைவாக வாழ்வதற்கு ஏற்ற வேறு கிரகத்தை கண்டுபிடித்து அதில் குடியேற வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அறிவியலில் மிகப் பெரிய மாற்றங்களுக்கு வித்திட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுக்கு நிகராக இவரை அறிவியல் உலகம் பாராட்டுகிறது. இவருடைய மரணம் அறிவியல் துறைக்கு ஒரு ஈடில்லா இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us