சர்வதேச தொழில்நுட்ப மேலாண்மை திருவிழா: பிரக்யான் 2018! | Kalvimalar - News

சர்வதேச தொழில்நுட்ப மேலாண்மை திருவிழா: பிரக்யான் 2018!மார்ச் 13,2018,12:07 IST

எழுத்தின் அளவு :

திருச்சி: ஆண்டுதோறும் என்.ஐ.டி திருச்சி நடத்தும் பிரக்யான் - சர்வதேச தொழில்நுட்ப மேலாண்மை திருவிழா இந்த ஆண்டும் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

14வது பிரக்யான் திருவிழா கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி 4 வரை நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் திருச்சி பல்கலைக்கழக மாணவர்களே தனி தனி குழுக்களாக பிரிந்து இந்த விழா ஏற்பாடு தொடர்பான அனைத்துப் பணிகளையும் சுயமாகச் செய்து  முடிப்பார்கள். நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, விருந்தினர்களை ஏற்பாடு செய்வது, நிதி கையாவது, ஒருங்கிணைப்பது என  மாணவர்களே தலைமை தாங்கி நடத்தும் இந்த விழாவிற்கு ஐ.எஸ்.ஒ., தரச்சான்று வழங்கி அங்கீகரிக்கப் பட்டுள்ளது.


இதில் கேட்டர்பில்லர் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விவேகந்த் வான்மீகநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார். பிரக்யான்
18 - இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக ‘அடுத்த பரிமாணம் (நெஸ்ட் டைமென்ஷன்) தேர்வு செய்ய பட்டிருந்தது. இந்தத் தலைப்பின் அடிப்படையில் கடந்த ஆறு மாதங்களாகவே நிகழ்ச்சி பணிகள் துவங்கப்பட்டது. 4 நாட்கள் திருச்சி பல்கலை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட மாணவர்களிடம் பல துறை சார்ந்த வல்லுநர்கள் உரையாற்றியதோடு, அவர்களின் துறை சார்ந்த சந்தேகங்களையும் தீர்த்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே ‘தொழில்நுட்பத்தைக் கொண்டாடுவோம் என்பதே.


இதைத் தவிர பல்வேறு போட்டிகளும் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், அதிக புள்ளிகள் பெற்ற பல்கலைக்கழகத்திற்கு சுழற் கேடயமும் வழங்கப்பட்டது. விழாவின் இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் முனைவர் மினி ஹாஜி தாமஸ் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்த படிக்கு எடுத்துச் செல்வதில் மாணவர்களின் பங்கு மிக அவசியம் என்றும் அதற்கு இதைப் போன்ற மேலாண்மை நிகழ்ச்சிகள் கைகொடுக்கும் என்றும் கூறினார். மேலும் இந்த விழாவிற்கான ஐ.எஸ்.ஒ அரசு அங்கிகார சான்று இன்னும் ஓராண்டிற்கு நீட்டிக்கப் படுவதாக அறிவித்தார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us