தேர்வு அறையில் மாணவிகளிடம் சில்மிஷம் ஆசிரியர் சஸ்பெண்ட் | Kalvimalar - News

தேர்வு அறையில் மாணவிகளிடம் சில்மிஷம் ஆசிரியர் சஸ்பெண்ட்மார்ச் 13,2018,10:39 IST

எழுத்தின் அளவு :

தேனி: தேனி அருகே பிளஸ் 2 தேர்வு அறையில் &'ஸ்மார்ட் போன்&' மூலம் மாணவிகளை படம் எடுத்து சில்மிஷம் செய்த புகாரில் ஆசிரியர் ஜெயராஜ், 39, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தேனிமாவட்டம் கம்பம் அடுத்த ராயப்பன்பட்டி அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஜெயராஜ். நேற்று நடந்த பிளஸ் 2 கணிதத்தேர்வில் கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறை மேற்பார்வையாளராக இருந்தார். அங்கு தேர்வு எழுதிய சில மாணவிகளை &'ஸ்மார்ட் போன்&' வைத்து படம் பிடித்து, சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

தேர்வு முடிந்தபின் மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் ஆசிரியர் ஜெயராஜை கண்டித்தனர். ராயப்பட்டி போலீசார் அவரிடம் விசாரித்தனர். இந்நிலையில் புகாரில் அடிப்படையில் ஜெயராஜை &'சஸ்பெண்ட் &' செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி உத்தரவிட்டுள்ளார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us