அண்ணா பல்கலை து.வே., பதவி : பட்டியல் வெளியிட தயக்கம் ஏன்? | Kalvimalar - News

அண்ணா பல்கலை து.வே., பதவி : பட்டியல் வெளியிட தயக்கம் ஏன்?மார்ச் 13,2018,10:21 IST

எழுத்தின் அளவு :

அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, விண்ணப்பித்தோர் விபரத்தை, இணையதளத்தில் வெளியிட, உயர் கல்வித் துறை தயக்கம் காட்டுவது ஏன்? என, பேராசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி, வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில், மூன்றாவது தேடல் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, பிப்., 2 வரை விண்ணப்பங்களை பெற்றது. பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் இருந்து, தகுதியான ஒருவரை, கவர்னர், பன்வாரிலால் புரோஹித் தேர்வு செய்ய உள்ளார். அதற்கு முன், துணைவேந்தர் பணிக்கு விண்ணப்பித்தோர் பெயர் பட்டியலை வெளியிடுமாறு, பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.

 

&'முறைகேடு நடக்காமல் தடுக்க, துணைவேந்தர் பணி நியமனங்களை வெளிப்படையாக நடத்த வேண்டும்&' என்றும், உயர் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே, சேலம், திருச்சி பல்கலைகளின் துணை வேந்தர்கள் நியமனத்தின் போது, விண்ணப்பித்தோர் பட்டியல், அந்தந்த பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதை பார்த்ததும், யார் மீது புகார்கள் உள்ளன என்பது குறித்து, தேடல் குழுவுக்கும், கவர்னருக்கும், பலர் கடிதங்கள் அனுப்பினர். அதே போல், அண்ணா பல்கலைக்கும் எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால், உயர் கல்வித் துறையும், கவர்னர் அலுவலகமும், விண்ணப்பித்தவர் விபரத்தை, இதுவரை வெளியிடவில்லை. இதனால், துணைவேந்தர் தேர்வு, முறையாக நடக்குமா என்ற சந்தேகம், பேராசிரியர்களுக்கும், கல்வியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த சந்தேகத்தை தீர்க்க, விண்ணப்பித்தோர் விபரத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நமது நிருபர் -


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us