வரும் கல்வியாண்டு முதல், தெற்காசிய பல்கலையில் பிஎச்.டி படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்கலை தலைவர் ஜி.கே. சத்தா கூறுகையில், "மொத்தம் 25 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, மாத உதவித் தொகையாக 12,000 ரூபாயும், இலவசமாக தங்குமிடமும் தரப்படும்" என்றார். சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள 8 நாடுகளின் மூலம், 2010ல் டில்லியில் தொடங்கப்பட்டு இக்கல்லுõரி செயல்படுகிறது.
கல்லுõரி பற்றிய விவரங்கள், சேர்க்கை விதிகள், கல்வித் தகுதி போன்றவற்றை www.southasianuniversity.org/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.