மதுரை பல்கலை அழைக்கிறது | Kalvimalar - News

மதுரை பல்கலை அழைக்கிறது

எழுத்தின் அளவு :

மதுரை காமராஜ் பல்கலை, பல்வேறு முதுநிலை படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பில், பிலிம் அண்டு எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடீஸ், டூரிஸம் அண்டு ஓட்டல் மேனேஜ்மென்ட், ஜீனோமிக்ஸ் போன்ற படிப்புக்களுக்கு சேர்க்கை நடக்கிறது.

இது தவிர, எம்.எஸ்சி., பிரிவில், பயோ கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற படிப்புகளுக்கும், எம்.ஏ., பிரிவில் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஸ்டடீஸ், எம்.பி.ஏ/எம்.சி.ஏ., போன்ற படிப்புகளில் சேர்க்கை நடக்கிறது.

கல்வித் தகுதி: ஒருங்கிணைந்த படிப்பிற்கு, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடக்கும். முதுநிலை படிப்புகளுக்கு 10 +2 +3, 10+3+2, 10+1+4 என்ற முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடக்கும்.

தற்போது இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் http://www.mkuniversity.org/ என்ற பல்கலை இணையதளத்தில் உள்ள படிவத்தை டவுண்லோடு செய்து, அத்துடன் 600 ரூபாய்க்கான டிடி மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து 2013 பிப்.,6க்குள் அனுப்ப வேண்டும். நுழைவுத் தேர்வு நடக்கும் நாள் 2013 மார்ச் 9,10.

Search this Site

Copyright © 2017 www.kalvimalar.com.All rights reserved | Contact us