அகமாதாபாத்திலுள்ள, நிர்மா பல்கலைக்கழகத்தின், மேலாண்மைக்கான கல்வி நிறுவனம், எம்பிஏ படிப்பிற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
www.imnu.ac.in என்ற இணையதளம் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2012 கேட் தேர்வை எழுதியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், ரூ.1500க்கான டிடி இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 31. அனைத்துவிதமான தகவல்களையும் அறிய www.imnu.ac.in என்ற வலைத்தளம் செல்க.