சிமேட் தேர்வுக்கு பதிவுசெய்து விட்டீர்களா? | Kalvimalar - News

சிமேட் தேர்வுக்கு பதிவுசெய்து விட்டீர்களா?

எழுத்தின் அளவு :

வரும் 2013-14 ஆண்டு சிமேட் தேர்வுக்காக(இரண்டாம் தேர்வு), பதிவுசெய்ய 2013, ஜனவரி 2ம் தேதியே கடைசி நாள்.

சிமேட் என்பது, AICTE அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் எம்பிஏ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் ஒரே தேர்வாகும் மற்றும் 2013-14ம் கல்வியாண்டின் PGDM படிப்புகளுக்கு, சுப்ரீம்கோர்ட்டால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வுகளில் ஒன்றாகும்.

அந்தந்த மாநில அரசுகள் மற்றும் பல்கலைகளின் சேர்க்கை அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் www.aicte-cmat.in என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன.

தேர்வெழுத, தாங்கள் விரும்பிய, தேதி மற்றும் நகரத்தை, தங்குதடையின்றி தேர்வு செய்ய விரும்புவோர், காலம் தாழ்த்தாமல், முன்னதாகவே, பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதர அனைத்து விபரங்களுக்கும் www.aicte-cmat.in என்ற வலைத்தளம் செல்க.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us