விஐடி வழங்கும் பி.டெக் படிப்புகள் | Kalvimalar - News

விஐடி வழங்கும் பி.டெக் படிப்புகள்

எழுத்தின் அளவு :

வேலூரிலுள்ள விஐடி பல்கலை, பல்வேறு துறைகளில் தான் வழங்கும் பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

விண்ணப்பத்தை, குறிப்பிட்ட தபால் நிலையங்களில், ரூ.950 பணமாக செலுத்தியோ, அதே தொகைக்கு டிடி எடுத்து, பல்கலைக்கு அனுப்பியோ, டிடி யுடன் பல்கலைக்கு, நேரடியாக சென்றோ பெற்றுக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க, www.vit.ac.in/admissions என்ற இணையதளம் செல்க. ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் ரூ.900 மட்டும் செலுத்தினால் போதும்.

2013ம் ஆண்டு, ஏப்ரல் 15 முதல் 30 வரை, கணினி அடிப்படையிலான விஐடி நுழைவுத்தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்கும் கடைசித் தேதி பிப்ரவரி 28, 2013.

இதர அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள www.vit.ac.in என்ற இணையத்தளம் செல்க.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us