சாதனையும், வேதனையும்! | Kalvimalar - News

சாதனையும், வேதனையும்!பிப்ரவரி 14,2018,12:11 IST

எழுத்தின் அளவு :

ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில், கடந்தாண்டு 33 இந்திய கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 43 கல்வி நிறுவனங்களாக அதிகரித்துள்ளது. ஆனால், தரவரிசையில், இந்திய கல்வி நிறுவனங்கள் சரிவையே சந்தித்துள்ளன!

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்(ஐ.ஐ.எஸ்சி.,) கடந்த ஆண்டைவிட, 2 இடங்கள் பின்தங்கி 29வது இடத்தை பிடித்துள்ளது. 

அதேபோல், இந்தியன்இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மும்பை (ஐ.ஐ.டி.,)யும் 2 இடங்கள் பின்னோக்கி 44வது இடத்தைப் பிடித்துள்ளது. 

சென்னை ஐ.ஐ.டி., மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் 41வது இடத்தைப் பிடித்த இக்கல்வி நிறுவனம், இந்தாண்டு 103வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

“சர்வதேச அளவிலான போட்டிகளை சமாளிக்க, இந்திய கல்வி நிறுவனங்கள் கடுமையாக முயற்சி செய்ய வேண்டியது அவசியம்” என்று ஆய்வு நடத்திய ‘டி.எச்.இ., குளோபல் ரேங்கிங்ஸ்’ அமைப்பின் எடிட்ரோரியல் டைரக்டர், பில் பட்டி தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us