பாரதியார் பல்கலையில் பி.எட்., | Kalvimalar - News

பாரதியார் பல்கலையில் பி.எட்.,

எழுத்தின் அளவு :

கோவை பாரதியார் பல்கலை, தொலைக் கல்வியில் பி.எட்., சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்க தகுதி

* அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், 2 ஆண்டு ஆசிரியர் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

* அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வு மற்றும் அரசு ஒதுக்கீட்டின்படி சேர்க்கை நடைபெறும். விண்ணப்ப படிவம் டிச.,1 முதல் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளோர், படிவத்தை நேரிலோ, தபாலிலோ அல்லது பல்கலை இணையதளத்திலோ டவுண்லோடு செய்து, அத்துடன் 500 ரூபாய்க்கான டிடி மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் 2013 பிப்., 28. நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் 2013 மார்ச் 31. மேலும் விவரங்களுக்கு http://www.bu.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us