பெரியார் பல்கலையின் ஆராய்ச்சி படிப்பு | Kalvimalar - News

பெரியார் பல்கலையின் ஆராய்ச்சி படிப்பு

எழுத்தின் அளவு :

சேலம் பெரியார் பல்கலை, யுனிவர்சிட்டி ரிசர்ச் பெல்லோஷிப் (யு.ஆர்.எப்) எனப்படும் ஆராய்ச்சி படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், உளவியல், கணினி அறிவியல், தமிழ், கணிதம், கல்வியியல், பயோ டெக்னாலஜி, காமார்ஸ், சோசியாலஜி, ஜியாலஜி போன்ற படிப்புகளில் சேர்க்கை நடக்கிறது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், சம்பந்தப்பட்ட படிப்புகளில் 55 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஆராய்ச்சியை முடிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாத உதவித்தொகையாக 4000 ரூபாய் வழங்கப்படும். நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

விருப்பமுள்ளோர், http://www.periyaruniversity.ac.in/ என்ற பல்கலை இணையதளத்தில் உள்ள படிவத்தை டவுண்லோடு செய்து அத்துடன் 200 ரூபாய்க்கான டிடி மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களை இணைத்து, டிச.,10க்குள் பல்கலை முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us