ஆந்திராவில் உள்ள ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலை, பகுதி நேரமாக எம்.எட்., சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: 55 சதவீத மதிப்பெண்களோடு பி.எட்., தேர்ச்சி அத்துடன் இரண்டு ஆண்டு ஆசிரியர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகள் பயிலக்கூடிய இப்படிப்பில், 25 இடங்களே நிரப்பப்படும். விருப்பமுள்ளோர் www.anu.ac.in என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை டவுண்லோடு செய்து, அத்துடன் 400 ரூபாய்க்கான டிடி மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து, டிச.,15க்குள் அனுப்ப வேண்டும்.