உலக வர்த்தக படிப்பு | Kalvimalar - News

உலக வர்த்தக படிப்பு

எழுத்தின் அளவு :

இந்தியாவிலேயே வணிக கல்வி துறையில், முதன்மையான இடம் பெற்றுள்ள கல்லூரி, டில்லியில் உள்ள ஸ்ரீராம் காமர்ஸ் கல்லூரி.

இக்கல்லூரி, முதுகலையில் உலக வர்த்தக படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கொண்ட இப்படிப்பு, சர்வதேச வணிக மேலாண்மை பிரிவில் சிறப்பு படிப்பாக வழங்கப்படுகிறது. மனிதவளம், நிதி, பைனான்ஸ், வர்த்தகம், மார்க்கெட்டிங் போன்றவை இங்கு கற்றுத் தரப்படுகின்றன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி, 10+2+3 என்ற அடிப்படையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். சென்னை, ஐதராபாத், பெங்களூரு, பாட்னா, மும்பை, டில்லி போன்ற இடங்களில் 2013 ஜன.,27 அன்று நடந்த எழுத்துத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விருப்பமுள்ளோர், www.srcc.edu என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை டவுண்லோடு செய்து, அத்துடன் 700 ரூபாய்க்கான டிடி மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து, டிச.,31க்குள் அனுப்ப வேண்டும்.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us