இக்னோவில் படிக்கலாம் | Kalvimalar - News

இக்னோவில் படிக்கலாம்

எழுத்தின் அளவு :

உலகளவில் பெரிய திறந்த நிலை பல்கலையாக, இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலை உள்ளது. பல்வேறு படிப்புகள் இங்கு வழங்கப்படுகிறது. இப்பல்கலையின் கிளைகள் மாவட்டந்தோறும் உள்ளன. மதுரையில் சிக்கந்தர் சாவடியில் இப்பல்கலையின் கிளை செயல்படுகிறது.

தற்போது இப்பல்கலை பல்வேறு படிப்புகளுக்கு 2013 ஜன., மாதத்துக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இளங்கலை, முதுகலையில், ஆங்கிலம், இந்தி, தத்துவம், கல்வியியல், வரலாறு, பொருளாதாரம், உளவியல் போன்ற பல்வேறு படிப்புகளுக்கும், பி.சி.ஏ/ எம்.சி.ஏ/ எம்.பி.ஏ/ பி.எஸ்.டபில்யூ/ எம்.எல்.ஐ.சி/ பி.எல்.ஐ.சி/ பி.காம்/ பி.எஸ்சி., போன்ற படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடைசி நாள், டிச.,14. ஆனால், 2013 ஜன.,8 வரை விண்ணப்பிப்போர், தாமதக் கட்டணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பல்கலையின் கிளைகளில் 100 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

விவரங்களுக்கு http://www.ignou.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Search this Site