மும்பையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் கல்வி நிறுவனத்தில், இண்டஸ்ட்ரியல் சேப்டி அண்டு என்விரான்மென்டல் மேனேஜ்மென்ட் பி.ஜி., டிப்ளமோ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சேர இளநிலை பொறியியல் அல்லது தொழில்நுட்ப படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், கேட் தேர்வு எழுதியிருப்பது அவசியம்.
ஆன்லைன் மற்றும் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பிக்க டிச.17 கடைசி தேதி. விபரங்களுக்கு http://www.nitie.edu/