அரசு பள்ளிக்கு இருக்கைகள் வழங்கல் | Kalvimalar - News

அரசு பள்ளிக்கு இருக்கைகள் வழங்கல்ஜனவரி 13,2018,10:50 IST

எழுத்தின் அளவு :

கிருஷ்ணகிரி அடுத்த, மகாராஜகடை அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, 350 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 

இவர்கள் அமர்ந்து படிக்க போதிய இருக்கை வசதி இல்லை என்று, வேப்பனஹள்ளி தி.மு.க., எம்.எல்.ஏ., முருகனிடம் பள்ளி சார்பில் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, பள்ளிக்கு டேபிள் மற்றும் இருக்கைகளை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் திம்மராஜ் முன்னிலை வகித்தார். 

எம்.எல்.ஏ., முருகன், மாணவ, மாணவியர் அமர்ந்து படிப்பதற்காக, ஆறு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 50 டேபிள்கள் மற்றும் 50 இருக்கைகளை பள்ளிக்கு வழங்கினார். ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ராஜசேகர், ஊராட்சி செயலாளர்கள் உமாபதி, மகேந்திரன், மதியழகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us