கோலமாவில் ஓவியம் பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் அசத்தல் | Kalvimalar - News

கோலமாவில் ஓவியம் பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் அசத்தல்ஜனவரி 13,2018,10:44 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள், வண்ணக் கோலமாவு மூலம், பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு ஓவியம் வரைந்து அசத்தியுள்ளனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் அரசு பாரதியார் பல்கலைக்கூடத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை போற்றும் வகையில், பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு ஓவியத்தை, மாணவர்கள் வரைந்துள்ளனர்.

கல்லுாரி வளாகத்தில், 90 அடி அகலம், 60 அடி நீளத்தில், இந்த ஓவியத்தை கலர் கோல மாவுகளை கொண்டு, தத்ரூபமாக உருவாக்கியுள்ளனர். கலை, ஓவியம், சிற்பக்கலை ஆகிய துறைகளை சேர்ந்த 20 மாணவர்கள், ஓவியத்தை வரைந்துள்ளனர்.

இந்த ஓவியம் 500 கிலோ கோலமாவில், உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு துவங்கிய இந்த ஓவியம், நேற்று காலை 9:30 மணிக்கு முடிவடைந்தது. சீறிவரும் காளையை, மாடுபிடி வீரர் அடக்குவது போன்ற, காட்சியை ஓவியமாக வரைந்துள்ளனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us