திருவள்ளுவர் பல்கலையில் 1 லட்சம் விடைத்தாள் மாயம் | Kalvimalar - News

திருவள்ளுவர் பல்கலையில் 1 லட்சம் விடைத்தாள் மாயம்ஜனவரி 13,2018,10:03 IST

எழுத்தின் அளவு :

திருவள்ளுவர் பல்கலையில், ஒரு லட்சம் விடைத்தாள்கள் மாயமானதாக, பேராசிரியர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

திருவள்ளுவர்பல்கலையின் கட்டுப்பாட்டில், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்களில், 128 கலைக் கல்லுாரிகள், ஆறு உறுப்பு கல்லுாரிகள் உள்ளன.

புகார்

இதில், 1.50 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர். 2017 டிச., 20ல், செமஸ்டர் தேர்வுகள் நடந்தன; விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. இந்நிலையில், ஒரு லட்சம் விடைத்தாள்கள் மாயமானதாக, பேராசிரியர்கள் புகார் செய்தனர்.

இது குறித்து, பல்கலை ஆசிரியர்கள் சங்க மூன்றாவது மண்டல செயலர், சாந்தி, நிருபர்களிடம் கூறியதாவது: 

திருவள்ளுவர் பல்கலையில், கடந்த மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்காக, எட்டு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன. இதில், இளங்கலை ஆங்கிலம், 40 ஆயிரம், முதுகலை ஆங்கிலம், 15 ஆயிரம், இளங்கலை தமிழ், 30 ஆயிரம், முதுகலை கணிதம், 5,000, இளங்கலை வரலாறு, 10 ஆயிரம் என, மொத்தம், ஒரு லட்சம் விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. 

இந்த விடைத்தாள்கள் என்னவானது; எங்கு போனது என, தெரியவில்லை. இதனால், தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுவர். தேர்வு முடிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது. இதற்கு, பல்கலை நிர்வாகம் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

அரசுக்கு விளக்கம்
திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர், முருகன் கூறியதாவது:

பல்கலைக் கழகத்தில் இருந்து, விடைத்தாள்கள் எதுவும் மாயமாக வாய்ப்பில்லை. பேராசிரியர்கள் எழுப்பிய புகார் குறித்து, அரசுக்கு விளக்கம் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், பல்கலை முறைகேடுகளை கண்டித்து, பல்கலை ஆசிரியர் சங்க மூன்றாவது மண்டலத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் சார்பில், சேர்க்காட்டில் உள்ள, பல்கலை அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us