’கேந்திரிய வித்யாலயா பள்ளி ஹிந்து மதத்தை ஊக்குவிக்கிறதா?’ | Kalvimalar - News

’கேந்திரிய வித்யாலயா பள்ளி ஹிந்து மதத்தை ஊக்குவிக்கிறதா?’ஜனவரி 11,2018,10:13 IST

எழுத்தின் அளவு :

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஹிந்து மதத்தின் அடிப்படையில், கண் மூடி, கைகளை குவித்து பிரார்த்தனை செய்ய சொல்வதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்துக்கும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த, 2015 புள்ளி விபரங்களின்படி, நாடு முழுவதும், 1,125 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாடுகளில், மூன்று பள்ளிகளும் இயங்குகின்றன. 

இவற்றில், 11 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான சட்ட விதிகளின்படி, ’அனைத்து பள்ளிகளிலும், காலையில் பிரார்த்தனையுடன் வகுப்புகள் துவங்க வேண்டும்.

’ஹிந்தி மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்களை, கண்களை மூடி, கைகளை குவித்து பிரார்த்தனை செய்ய வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது.இதை எதிர்த்து, வழக்கறிஞர், விநாயக் ஷா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

’மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மதங்களை கட்டாயப்படுத்தக் கூடாது. கண்களை மூடி, கைகளை குவித்து பிரார்த்தனை செய்வது, ஹிந்து மதத்தை பின்பற்றுவதை கட்டாயப்படுத்துவதாக உள்ளது.

’அதனால், இந்த பிரார்த்தனை முறையை ரத்து செய்ய வேண்டும்’ என, மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இதை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டு உள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us