டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுள்ளது. பி.ஆர்க்., படிக்கலாமா? இன் டீரியர் டிசைனிங் படிக்கலாமா? | Kalvimalar - News

டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுள்ளது. பி.ஆர்க்., படிக்கலாமா? இன் டீரியர் டிசைனிங் படிக்கலாமா?அக்டோபர் 06,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஏற்கனவே சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ள நீங்கள் இனி பி.ஆர்க். படிக்கும் வாய்ப்பு இல்லை; தேவையும் இல்லை. சிவில் இன்ஜினியரிங்கோடு தொடர்புடைய கேட் எனப்படும் கம்ப்யூட்டர் எய்டட் டிசைனிங் படிப்பது பலன் தரும்.

மேலும் இன்டீரியர் டிசைனிங்கில் ஆர்வமுள்ள நீங்கள் இதில் பயிற்சி பெற்றால்

  • இன்டீரியர் டெகரடேர்
  • கிரியேட்டர் செட் டிசைனர்
  • எக்சிபிஷன் டிசைனர்
  • விண்டோஸ் டிஸ்பிளே டிசைனர்
    போன்ற பணிகளில் ஈடுபடலாம். ஒரு படிப்பை வெறும் படிப்பாகப் படிப்பதால் மட்டுமே நாம் அதில் சிறந்து விளங்க முடியாது. ஏற்கனவே தொழில் நுட்பத் தகுதி பெற்றுள்ள நீங்கள் பின்வரும் சிறப்புத் திறன்களைப் பெறுவதும் அவசியம்.

 

  • பண்பாட்டு மாற்றங்களை அறிந்திருப்பது
  • ஓவியத் துறையில் ஆர்வம் இருப்பது
  • கற்பனை வளம் மிக்கவராக இருப்பது
  • படமாக வரைவதை உருவமாக மாற்றும் ஆற்றல் பெறுவது

தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில் இன்டீரியர் டிசைனிங் படிப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

  • காலேஜ் ஆப் ஆர்ட் அண்ட் டிசைன், 7 பி.வி. கோவில் தெரு, அமைந்தகரை, சென்னை 600 029.
  • ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு

மேலும் ஆமதாபாத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் நிறுவனம் இந்த படிப்பை நடத்துகிறது. மேலும் சென்னையிலுள்ள எக்ஸ்டீரியர்ஸ்-இன்டீரியர்ஸ் நிறுவனம் இதில் ஓராண்டு டிபளமோ படிப்பை நடத்துகிறது. இவற்றைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us