இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா! | Kalvimalar - News

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா!அக்டோபர் 12,2017,18:28 IST

எழுத்தின் அளவு :

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது.

இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உணவு, சுற்றுச்சூழல், வாணிலை மாற்றம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. அதனால், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை மத்திய அரசு நடத்தி வருகிறது.

மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையிலும், அறிவியல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துக்காட்டும் விதமாகவும் ஆண்டு தோறும் இத்திருவிழா நடைபெற்று வருகிறது. 

மேலும், மாணவர்கள், இளம் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப கோட்பாட்டாளர்கள் தங்களது நுட்ப அறிவு மற்றும் கருத்துகளை பரிமாற்றி கொள்ளவும், ஸ்வஸ்த் பாரத் அபியான், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் வில்லேஜ், ஸ்மார்ட் சிட்டி, நாமமி கங்கே மற்றும் உன்னத பாரத் அபியான் போன்ற திட்டங்களுக்கு உதவும் வகையிலும் அறிவியல் திருவிழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு முதல் முறையாக சென்னையில் ‘இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா’, வரும் 13-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி மையம் (சிஎல்ஆர்ஐ), கட்டிட பொறியியல் ஆய்வு மையம், தேசிய கடல் ஆராய்ச்சி மையம், ஐஐடி சென்னை ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. 

’ஆழ் பெருங்கடல் ஆராய்ச்சி’ கருத்தரங்கு

புவி மேற்பரப்பில் 72 சதவீதம் கடல்களால் சூழப்பட்டுள்ளது. இந்நாள் வரை 5 சதவீதம் மட்டும் கடல் சார்ந்த ஆராய்ச்சிகள் நடைபெற்றிருகின்றன. இந்திய கடல்களில், பல்வேறு வகையான உயிரினங்கள், உயிரன பாசிகள் போன்ற, அறியப்பட உயிரணங்கள் மற்றும் அறியப்படாத பல உயிரங்கள் இந்திய ஆழ் கடல்களில் வாழ்கின்றன.

எனவே, கடல் வளங்களை ஆய்வு செய்வதற்கும், கடல் சார்ந்த தொழில் வளங்களை அதிகரிக்கவும் ’நேஷனல் மிஷன்’ எனும் திட்டத்துடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை (டிஎஸ்டி), உயிர்தொழில்நுட்ப துறை (டிபிடி), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்), இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ), அணு சக்தி துறை (டிஏஇ), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஏஆர்) உள்ளிட்ட துறைகளுள் செயல்படுகின்றன. 

மேலும், பெருங்கடல் அறிவியல், மற்றும் கடல் வளங்களைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் ஆகிய இரண்டு பிரிவுகள் தேசிய அறிவியல் திட்டத்தில் இணை திட்டங்களாக செயல்படுகின்றன.  இந்த கருத்தரங்கில் கடல் வள ஆராய்ச்சி  மேம்படுத்துவதற்கான திட்டங்கள் விவாதிக்கப்படும்.

நடைபெறும் நாள்: அக்டோபர் 14

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்கள் கூட்டம்

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பேரிடர்கள் நேரிடும் போது, இந்திய மக்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம். அதனால், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டின் மூலம் எவ்வாறு இயற்கை பேரிடர் சவால்களை எதிர்கொள்வது என்பதை, நமது அந்டை நாடுகளில் தொழில்நுட்ப அறிவியல் துறையுடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்கள் கூட்டம் நடைபெறும்.

நடைபெறும் நாள்: அக்டோபர் 13

எஸ்.ஒய்.பி.ஓ.ஜி., 

இளைஞர்கள், அறிவியல் புதுமையாளர்கள் மற்றும் புத்தாக்கு படைப்பாளர்களால் மட்டுமே இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு, மத்திய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றின முழுமையான தகவல்கள் இந்த நிகழ்ச்சியில் விவரிக்கப்படும். 

நிகழ்வுகள் 

ஸ்வச் பாரத், மேக்கிங் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்வஸ்த் பாரத் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை ஆகிய தலைப்பின் கீழ் கருத்தரங்குகள் சமர்ப்பிக்கப்படும்.

ஆய்வுக் கட்டுரை எழுதுதல், அறிவார்ந்த சொத்துகளை பாதுகாத்தல், யோசனைகளை தொடக்கமாக மாற்றுதல் மற்றும் இளம் விஞ்ஞானிகளுக்கான அரசாங்க கொள்கைகள் போன்ற தலைப்பில் பயிலரங்கங்கள் நடைபெறும். 

நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்கும், இளம் விஞ்ஞானிகள், அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் விஞ்ஞான பங்களிப்புகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கும் தேசிய நிகழ்ச்சியாகும். 45 வயதுக்கு உட்பட்ட விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் தொழில் நுட்ப மாணவர்களுக்கு பங்குபெறலாம்.

நடைபெறும் நாள்: அக்டோபர் 13 முதல் 16 வரை

சயின்ஸ் வில்லேஜ்

பிரதான் மந்திரி சன்சாத் ஆத்ஷ்ஷ் கிராம் யோஜ்னா திட்டத்தின் கீழ், சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் தத்தெடுத்த கிராமத்திலிருந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை இந்நிகழ்ச்சியின் பிரதிநிதிகளாக நியமிப்பார்கள். அறிவியல் விஞ்ஞானத்தை ஊக்குவிக்கும் விதமாக, தங்களது தனிப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியிடுவர். 

சிறப்பு

விஞ்ஞானிகள் மற்றும் மாணவர் தொடர்பு, அறிவியல் சோதனைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி, அறிவியல் தொடர்பான விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.

நடைபெறும் நாள்: அக்டோபர் 13 முதல் 16 வரை

பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முணைவோர் கூட்டம்
பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பெண்களிடம் அறிவியல் மற்றும் தொழில்முணைவோர் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்நிகழ்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடைபெறும் நாள்: அக்டோபர் 15 முதல் 16 வரை

தேசிய அறிவியல் ஆசிரியர்கள் பயிலரங்கம் (வட கிழக்கு மாநிலங்களை மையமாகக் கொண்டது)

அர்ப்பணிப்புடன் நூற்றுக்கணக்கான புதுமையான அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை, மேற்கொண்டு விருதுகள் பெற்ற ஆசிரியர்கள், தங்கள் அனுபவத்தை ஒற்றை மேடையில் பகிர்ந்து கொள்ள கூடிய சிறப்பு நிகழ்ச்சி ஆகும். 

விரிவான மற்றும் தொடர்ச்சியான அறிவியல் கற்றலை மாணவர்களிடம் ஏற்படுத்தவும், கற்பிக்கும் நடைமுறைகளில் உள்ள அம்சங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்  இடையேயான இணைப்பு, மற்றும்  தேசத்திற்கான கல்வி கொள்கைகள் பற்றி குழு கலந்துரையாடல்களில் விவாதிக்கப்படும்.

நடைபெறும் நாள்: அக்டோபர் 14 முதல் 16 வரை

தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பு

தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இடையிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கருத்தரங்குள் நடைபெறும். 
நாட்டின் விஞ்ஞான முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மாற்று போக்குகள்,   தொழில் மற்றும் பொருளாதாரம் நிலைகள் பற்றி விவாதிப்பதற்கு, கல்வி நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கான வாய்ப்பு.

நடைபெறும் நாள்: அக்டோபர் 14 முதல் 16 வரை

மாபெரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை உலகிற்கு வெளிப்படுத்தும் விதமாக மாபெரும் அறிவியல் தொழில் கண்காட்சி நடைபெறும். ஸ்வஸ்த் பாரத் அபியான், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் வில்லேஜ், ஸ்மார்ட் சிட்டி, நாமமி கங்கே மற்றும் உன்னத பாரத் அபியான் போன்ற மத்திய அரசு திட்டங்களுக்கான அறிவியல் பங்களிப்பை வெளிகாட்டும் விதமாக நடைபெறும்.

நடைபெறும் நாள்: அக்டோபர் 13 முதல் 16 வரை

இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழா

மாணவர்களுக்கும் பிற பங்கேற்பாளர்களுக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பல்வேறு புனைவுகள் பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது அறிவியல்  திரைப்பட திருவிழா! 

சர்வதேச அளவில் பாராட்டு பெற்ற மற்றும் மற்றும் தேசிய விருதினை வென்ற அறிவியல் திரைப்படங்கள் விழாவில் திரையிடப்படும். அறிவியல் திரைப்பட போட்டியில் தெரிவு செய்யப்பட்ட படங்கள் திரையிடப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.  

நடைபெறும் நாள்: அக்டோபர் 14 முதல் 16 வரை

நேஷனல் ஸ்டாட் அப் 

மாணவர்களை தொழில்முனைவோராக ஊக்குவிப்பதற்கும், தொடக்க நிலை மேம்பாட்டுக்கான கொள்கையை உருவாக்க மற்றும் பல பங்குதாரர்களுக்கு ஒரு பொதுவான தளத்தை உருவாக்குவதற்கான, செயல்முறைகள் பற்றின குழு விவாதங்கள் நடைபெறும். அனைத்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில், மனிதவள மேம்பாடு அமைச்சகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பிரதமரின் அலுவலகம், தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்பு, தேசிய தொழில் முனைவோர் துறைகள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி.

நடைபெறும் நாள்: அக்டோபர் 14 முதல் 15 வரை

மேலும் நிகழ்ச்சிகள் பற்றின விரிவான தகவல்களுக்கு: https://scienceindiafest.org 


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us