செட் தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு | Kalvimalar - News

செட் தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு

எழுத்தின் அளவு :

கோவை: பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தும் செட் தேர்வுக்கான விண்ணப்ப தேதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 7ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள செட் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஆகஸ்ட் 31 கடைசி தேதி எனவும், விண்ணப்பம் தபால் மூலமாக, பாரதியார் பல்கலைக்கழகம் சென்றடைவதற்கான கடைசித்தேதி செப்டம்பர் 7 எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அந்த தேதி நிபந்தனைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசித்தேதி செப்டம்பர் 7 எனவும், பல்கலைக்கு, விண்ணப்பம் சென்றுசேரும் கடைசித்தேதி செப்டம்பர் 14 எனவும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்வுத் தேதியில் இதுவரை மாற்றம் இல்லை.

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us