எம்.டி.ஐ வழங்கும் மேலாண்மை படிப்பு | Kalvimalar - News

எம்.டி.ஐ வழங்கும் மேலாண்மை படிப்பு

எழுத்தின் அளவு :

மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் எனப்படும் எம்.டி.ஐ, பப்ளிக் பாலிசி அன்ட் மேனேஜ்மென்ட் என்ற பெயரில், 12 மாதங்கள் காலஅளவைக் கொண்ட முழுநேரப் படிப்பை வழங்குகிறது.

தகுதி - இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மேலும், 7 வருட அனுபவத்துடன், DoPT மற்றும் GoI ஆகியவற்றின் உதவிபெறும், மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளிலுள்ள ஆல் இந்தியா சர்வீஸ்/கிளாஸ் 1 சிவில் சர்வீஸ் அதிகாரிகள் அல்லது பப்ளிக் பாலிசி மற்றும் மேலாண்மை பணிகளில் ஈடுபட்டிருக்கும், 9 வருட அனுபவமுள்ளவர்கள் இப்படிப்பிற்கு தகுதியானவர்கள்.

வயது - படிப்பில் சேருகையில், அதிகபட்சமாக 50 வயதுவரை இருக்கலாம்.

தேர்வு செய்வதற்கான நேர்முகத்தேர்வு - செப்டம்பர் 12, 13ம் தேதிகளில் நடைபெறும்.

இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி - ஆகஸ்ட் 30.

விண்ணப்ப படிவம் மற்றும் பிற அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள www.mdi.ac.in என்ற இணையதளம் செல்க.

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us