பொறியாளர்களுக்கான டாக்டோரல் உதவித்தொகை | Kalvimalar - News

பொறியாளர்களுக்கான டாக்டோரல் உதவித்தொகை

எழுத்தின் அளவு :

ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப் அடிப்படையில், யு.ஜி.சி வழங்கும் பல்வேறு வகைகளிலான தேசிய டாக்டோரல் உதவித்தொகைகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை ஏஐசிடிஇ வரவேற்கிறது.

அவற்றில் முக்கியமாக 2 வகைகள் உண்டு. ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப் என்ற உதவித்தொகையானது, பி.டெக் முடித்த மாணவர்களுக்கு, எம்.டெக் படிப்பதற்காக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், ஒரு மாணவருக்கு மாதம் ஒன்றுக்கு தலா ரூ.14000 வழங்கப்படும்.

அதேசமயம், சீனியர் பெல்லோஷிப் திட்டத்தில், எம்.டெக் முடித்த மாணவர்கள் டாக்டோரல் படிப்பை மேற்கொள்வதற்காக, ஒரு மாணவருக்கு மாதம் ரூ.16000 முதல் ரூ.18000 வரை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை 3 வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.

மாணவர்கள், தகுதி அடிப்படையிலும் மற்றும் பிற விதிமுறைகளின் அடிப்படையிலும், ஏஐசிடிஇ கவுன்சில் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த உதவித்தொகைகளைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான அனைத்து விபரங்களையும் அறிய www.aicte-india.org என்ற இணையதளம் செல்க.

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us