டெலிகாம் துறை சார்ந்தவர்களுக்கான செமினார்
எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், தகவல்தொடர்பு துறையில் பணியாற்றும் பொறியாளர்கள், டெலிகாம் துறையில் பணிபுரிய விரும்பும் வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள், டெலிகாம் துறையில் பணியாற்றும் எக்சிகியூடிவ்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில், MOBILE BROADBAND AND MULTIMEDIA COMMUNICATION என்ற தலைப்பில், ஒரு கருத்தரங்கை(seminar) வரும் 25ம் தேதி (ஆகஸ்ட்) The Institution of Engineers (India) Tamilnadu state centre, என்ற அமைப்பு நடத்துகிறது.
3G, LTE, 4G, WIMAX, Mobile broadband Multimedia communication
போன்ற வயர்லெஸ் நெட்வொர்க்குகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பற்றி, பி.எஸ்.என்.எல், அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி-சென்னை, விப்ரோ, L&T மற்றும் இன்போடெக் போன்ற நிறுவனங்களைச் சார்ந்த நிபுணர்களைக் கொண்டு செமினார் நடத்தப்படும்.
கலந்துகொள்ளும் நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பதிவு செய்வதற்கு மற்றும் இதர விபரங்களுக்கு 044-25360614 and 9444003939 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
இதில் கலந்துகொள்ள மாணவர்களுக்கான கட்டணம் ரூ.400, ஆசிரியர்களுக்கு ரூ.1000, பொறியாளர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு(field executive) ரூ.1500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.